-Muhusi Rahmathulla-*
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இரு பிரதான கட்சிகளில் பெரும்பாலும் போட்டியிடும் பெருபான்மை இன வேட்பாளர்கள் தொடர்பில் ஒரு தெளிவு பெறல் இன்றியமையாததாகும். அந்த வகையில்,
ஐ.தே.க.
1. பாலித ரங்கே பண்டார (M.P)
2. நிரோஷன் பெரேரா (M.P)
3. சாந்த அபேசேகர (Provincial Councilor) Chilaw
4. அசோக (Provincial Councilor) Nattanadiya
5. ஹெக்டர் அப்புஹாமி (Provincial Councilor) Wennappuwa
6. சித்ரலால்(Provincial Councilor) Wennappuwa
7. அசோக வடிகமங்காவ (Provincial Councilor) Puttalam
8. முஸ்லிம் வேட்பாளர்
9. X
10. Y
11. Z
ஸ்ரீ.ல.சு.க
1. மில்ரோய் பெர்னாந்து (M.P)
2. தயாஸ்ரீத திசேரா (M.P)
3. பிரியங்கர ஜயரத்ன (M.P)
4. அருந்திக பெர்னாந்து (M.P)
5. நியோமால் பெரேரா (M.P)
6. விக்டர் என்தனி (M.P)
7. சனத் நிஷாந்த (Provincial Council Minister)
8.முஸ்லிம் வேட்பாளர்
9. X
10. Y
11. Z
இந்நிலையில் முஸ்லிம்கள் ஐ.தே.க. சார்பு மிக்கவர்கள் என்று கருதி இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ்(SLMC) மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்(ACMC)என்பன ஐ.தே.கட்சியுடன் இணைந்து தமது வேட்பாளர் ஒருவரைக் கூட நிறுத்த முற்படலாம். இதன் மூலம் மேலே பட்டியல் இடப்பட்டுள்ள பெரும்பான்மை இன வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் எதிர்பார்க்கப்படும் பலன் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிதாகும். கடந்த தேர்தல்கள் அனைத்துமே இதற்கு சாட்சியாகும்.
இதனை விட இன்னொரு பக்கம் குறித்தும் நமது கவனம் திரும்ப வேண்டியுள்ளது.
இந்த சிறுபான்மைக் கட்சிகள் ஐ.தே.கட்சியில் தமது வேட்பாளரை இறக்கி வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று அறிந்துள்ள நிலையிலும் தமது தேசிய நிகழ்ச்சி நிரலுக்காகவும் இந்த இணைப்பை விரும்புவர். அது புத்தளத்துக்கு MP கிடைக்குதோ இல்லையோ தமது கட்சிகளுக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன. அதன் மூலம் ஐ.தே.க பலமடைந்துள்ளது என்று காண்பித்து, தமது கட்சிகளுக்கான தேசிய பட்டியல்களுக்கு பேரம் பேசும் நிலையும் இடம் பெறலாம். எனவே நமது மக்களின் வாக்குகளை ஏலத்தில் விற்கவும் நாம் அனுமதிக்கக் கூடாது. இதற்கும் நமது அரசியலில் அனுபவங்களும் உண்டு.
எனவே நாம் தற்போது ஒரு முச்சந்தியில் மட்டும் நிற்கிறோம் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.


0 Comments