Subscribe Us

அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் காவல்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்: ஜனாதிபதி


காவல்துறை சேவையை பக்கச்சார்பற்றதும், சுயாதீனமானதுமான சேவையாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சட்டத்தை அமுலாக்கும் போது, அரசியல் அழுத்தங்களுக்கு இடம்கொடுக்க கூடாது என்று அவர் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி நேற்று காவல்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுயாதீனமாக செயற்படுவதன் மூலம் காவல் துறையினரின் கௌரவம் பேணப்படும். சாதாரண மக்களிடம் காவல்துறையினர் இராணுவத்தை போல நடந்துகொள்ள கூடாது என்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்தை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments