மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவனொருவன் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
இவ்வாரத்தினுள் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது டெங்கு மரணம் இதுவாகும். கடந்த திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் காத்தான்குடியில் ஒரு சிறுமியும் 22 வயது இளைஞர் ஒருவரும் டெங்கு நோய்க்கு பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் பிறைந்துறைச்சேனை - பன்சலை குறுக்கு வீதியில் வசிக்கும் ஹயாத்து முஹம்மது றிஸ்பாத் ஆவார். குறித்த மாணவன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments