Subscribe Us

header ads

சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே விளையாட்டுப் போட்டி


WODEPT நிறுவனத்தின் கீழ் இயங்கும் கரிக்கட்டி கிராம சிறுவர் சங்கம், அபயபுர கிராம சிறுவர் சங்கம் ஆகியவற்றின் அங்கத்தவர்களுக்கு இடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான எல்லே சுற்றுப் போட்டி 17.02.2015-ம் திகதி காலை 9.00 முதல் பி.ப. 12.30 வரை கரிக்கட்டி மைதானத்தில் 2:3 அடிப்படையில் இடம் பெற்றது. அதிக ஓட்டங்களைப் பெற்ற கரிகட்டி கிராமத்தின் ‘சீ லயன்’ (Sea Lion) சிறுவர் சங்கம் வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.
முதலாம் சுற்றில் அபயபுர கிராமத்தின் ‘கிரியாகாரி விருதரு’ சிறுவர் சங்கமும், கரிக்கட்டி கிராமத்தின் ‘சீ லயன்’ சிறுவர் சங்கமும் கலந்துகொண்டது. முதல் சுற்றின் முதலாம் ஆட்டத்தில் அபயபுர கிராமமும் தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் ஆட்டங்களில் கரிகட்டி சிறுவர் சங்கமும் வெற்றி பெற்றன.
இச் சுற்றுப் போட்டி கரிகட்டி, அபயபுர இரு கிராமங்களுக்கும் பொறுப்பான கள உத்தியோகத்தர், கிராம செயற்பாட்டுக் குழுக்கள், தொண்டர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.
சிறுவர்களை உடல், உள, கல்வி, சமூக, பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்காகவும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காகவும் தமது உரிமைகளை சிறுவர்கள் தாமாகப் பெற்றுக்; கொள்வதற்கான அறிவு, பயிற்சி, வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. புத்தளம், முந்தல், கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுகளின் 17 கிராம சேவகர் பிரிவுகளில் WODEPT நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் இச் சிறுவர் சங்கங்கள் இயங்குகின்றன.
இச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிகள் வெகுவிரைவில் அபயபுர கிராம மைதானத்தில் இடம் பெறுவதாக தீர்மானிக்கப்பட்டது.





தகவலும் படங்களும்: எம்.எப்.எம். சுபியானி (WODEPT கள உத்தியோகத்தர்)

நன்றி -The Puttalam Times-

Post a Comment

0 Comments