Subscribe Us

எனது தம்பி நாட்டை விட்டு தப்பி ஓடவில்ல -நாமல் ராஜபக்ஷ


தம்பி யோசித்த பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் சொந்தத் தேவைக்காக வெளிநாடு சென்றுள்ளா் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

இன்று திஸ்ஸ அத்தநாயக்க நேற்று பிணையில் நீதிமன்றிலிருந்து வெளியே வரும்போது அவ்விடத்திற்கு வருகை தந்த போதே நாமல் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதேவேளை ஜேவிபி மேல்மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, யோசித்த கடற்படையில் விசாரணைகளில் இருக்கும்போது எப்படி தனிப்பட்ட விஜயத்தை மேற்கொள்வார் என பாதுகாப்புச் செயலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

தனிப்பட்ட விஜயத்திற்காக மட்டுமன்றி திருமணப்பதிவு என்றால் கூட அனுமதி பெற வேண்டியுள்ள நிலையில் எந்த விஷேட சலுகையின் அடிப்படையில் துபாய் சென்றார் என பாதுகாப்பு செயலாளரை கேட்டு மேல் மாகான சபை உறுப்பினர் ஜயதிஸ்ஸ கடிதமொன்றை அனுப்பியுள்ளார். 

இதேவேளை யோசித்த தனது காலில் ஏற்பட்ட உபாதைக்கு மருத்துவ சிகிச்சை பெறவே வெளிநாடு சென்றதாக யோசித்த தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments