சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து அந்நாட்டு பெண் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.
அரசின் தடையை மீறி கார் ஓட்டி கைது செய்யப்பட்டு பின்னர் அபராதம் செலுத்தினர். போராட்டத்தை தொடர்ந்து பெண்கள் கார் ஓட்ட, சவுதி அரேபிய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் லுஜெயின் அல்–ஹதிபோல் மற்றும் மேசா அல்–அமோய்டி ஆகிய இரண்டு பெண்கள் கார் ஓட்டிய போது கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் கார் ஓட்ட லைசென்சு பெற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் 73 நாட்களுக்கு பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


0 Comments