மத்துகம- அகலவத்த நகரில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அவரை மண்டியிட வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும எதிர்வரும் 6ம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பபினர் இன்று மத்துகம நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதவான் சானிமா விஜேபண்டார இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மத்துகம- அகலவத்த நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகம் ஒன்று திறக்கப்பட இருந்த நிலையில் அங்கு சென்ற பாலித தெவரப்பெரும பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தின் சந்தேக நபரான பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும உட்பட, குழுவினரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


0 Comments