Subscribe Us

பொண்டிங்கை பின்தள்ளி சங்கக்கார 2ம் இடம்



ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற இரண்டாவது இடத்தை குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டுள்ளார். 

இன்று ஆரம்பமாகியுள்ள உலகக் கிண்ண தொடரில் முதல் போட்டியாக நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. 

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 331 ஓட்டங்களைக் குவித்தது. 

இதனையடுத்து தற்போது பதிலளித்து ஆடி வரும் இலங்கை அணி சற்று தடுமாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. 

எனினும் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார இந்தப் போட்டியில் ஒரு சாதனையை எட்டியுள்ளார். 39 ஓட்டங்களை இன்று பெற்றுக் கொண்ட அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை தன்வசப்படுத்தினார். 

இதன்படி இவர், இதுவரை இரண்டாம் இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய வீரர் ரிக்கி பொண்டிங்கை (13708 ஓட்டங்கள்) பின்தள்ளியுள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் சங்கக்கார தற்போது குவித்துள்ள ஓட்டங்கள் 13714. 

இதேவேளை 18,426 ஓட்டங்களை ஒருநாள் போட்டிகளில் குவித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments