400கோடி ரூபாய் வற்வரி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதான இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள தண்டனையை அமுல்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அவ்விருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வற்வரி மோசடி வழக்கில் இருவரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு இருவருக்கும் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பையே அமுல்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முஹமது முர்ஷீட் என்பவருக்கு 260 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 6.3 மில்லியன் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான நாகூர் மொஹமட் நையிம் என்பவருக்கு 120 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் 2.4 பில்லியன் ரூபாய் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இம்மோசடியின் பிரதான சூத்திரதாரியான, தற்போது டுபாயில் வசிக்கும் கார்மின் குதுப்தீனைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.-ET-


0 Comments