Subscribe Us

என்னிடம் 2, 3 கடிகாரங்களே உள்ளன - நாமல்


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பயன்படுத்திய பெறுமதியான கைக்கடிகாரங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இக்குற்றசாட்டை அவர் மறுத்துள்ளார். 

நாமலின் கைக்கடிகாரங்களின் பெறுமதி 59 லட்சத்திற்கும் அதிகமானதென தெரியவந்துள்ளது. இதற்கமைய அவர் பயன்படுத்திய 13 கைக்கடிகாரங்களின் பெறுமதி 7 கோடியே 60 லட்சம் ஆகும்.

50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு இவ்வளவு செல்வங்களை பெற்றுக்கொண்டுள்ளார் என்ற மிக பாரிய கேள்வி ஒன்று எழுப்பப்படுகின்றது.

என்னிடம் 2, 3 கடிகாரங்களே உள்ளன அதில் சில கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டவை. இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்துகின்றன. எனினும்  மக்கள் இவற்றை நம்புவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.

ஒரே கடிகாரத்தை வித்தியாசமான முறையில் புகைப்படங்கள் எடுத்து என் மீது சேறு பூசுவதற்கு நினைக்கிறார்கள், என இணையத்தளங்களில் இடம் பெற்ற கலந்துரையாடலுக்கு இவ்வாறு நாமல் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.

Post a Comment

0 Comments