இங்கிலாந்தை சேர்ந்த 10 வயது சிறுமி எஸ்தர் ஒகடே. இவர் பள்ளியில் படித்து வருகிறாள். கணக்கு பாடத்தில் மிகவும் புத்திசாலியாக திகழ்கிறாள். எனவே அவள் இங்கிலாந்து திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கணக்கு பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கிறாள்.
அதற்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சிறப்பு தேர்வு நடந்தது. அதில் 100 மதிப்பெண் பெற்ற அவள் பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டாள். இப்படிப்பு 2 வருட காலமாகும். அதற்குள் முழுமையாக படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என எஸ்தர் ஒகடே தெரிவித்தாள்.
இவரது 6 வயது தம்பியும் கணக்கில் புலி ஆக திகழ்கிறான்.
0 Comments