Subscribe Us

header ads

தனியார் ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு


சம்பள நிர்ணய சபையின் கீழ் இருக்கும் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 10 ஆயிரமாக அதிகரிக்க தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சேவை வழங்குனர்கள் அங்கம் வகிக்கும் தேிய தொழிலாளர் ஆலோசனை சபை நேற்று இணக்கம் வெளியிட்டுள்ளது.

நீதி மற்றும் தொழில் சேவைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் தேசிய தொழில் ஆலோசனை சபை இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் தொழில் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

Post a Comment

0 Comments