Subscribe Us

header ads

அரசின் 100 நாள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகத்தை நிரந்தரமாக்க நடவடிக்கை (PHOTOS)

பி. முஹாஜிரீன்

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் நிரந்தரமாக்கப்படவுள்ளது.

இது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று (02) திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண பிரதி அஞசல் மா அதிபதி வீ.விவேகானந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் அஞ்சல்துறை அமைச்சின் செயலாளா ஏ.அப்துல் மஜீத் கலந்து கொண்டார்.

அக்கரைப்பற்று பிரதேச அஞசல் அலுவலகத்தை நிரந்தரமாக்குவது தொடர்பான மகஜர்கள் கையளிக்கப்பட்டதாக அஞ்சல்  திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம்.பைஸர் தெரிவித்தார்.
 .

இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சின் செயலாளர ஏ.அப்துல் மஜீட் மிக விரைவில் அஞ்சல் அத்தியட்சர் அலுவலகத்தை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படுமெனவும் செயலாளர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் அம்பாறை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆர். ரூபசுந்தரபண்டா, அஞ்சல்; திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் யு.எல்.எம்.பைஸர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர் சங்கத்தினால் இதற்கான கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியடசர்அலுவலகமானது தற்காலிய அடிப்படையில் 2000ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்றது. இதன் மூலமாக  13 அஞ்சல் அலுவலகங்களினதும், 53 உப அஞ்சல் அலுவலகங்களினதும் நிருவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




Post a Comment

0 Comments