பி. முஹாஜிரீன்
அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் பாதுகாப்பு பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (20) செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
அறபா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நுன்ணாய்வு பரிசோதகர் ஏ.ஏ.ஏ.சர்பான் அதிதியாக கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளித்தார்.
கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களை எவ்வாறு இணங்கான்பது, காலவதியான பொருட்களை எவ்வாறு அழித்தொழிப்பது, இரசாயணம் கலந்த உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படக்கூடிய தீமைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.





0 Comments