Subscribe Us

ஹொகேனக்கல் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி



தர்மபுரியிலிருந்து அஞ்செட்டி என்ற இடத்தை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஹொக்கேனக்கல் அருகில் மலைப் பாதையில் செல்லும்போது, அந்தப் பாதையை ஒட்டிய சரிவில் கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் பலியானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் பேருந்து விபத்தில் சிக்கியபோது, அதில் சுமார் 65 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர். 

தற்போது அப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments