பைஷல் இஸ்மாயில் –
தரம் ஒன்று மாணவர்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வு இன்று (20) ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அந்த வகையில், அக்கரைப்பற்று வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்ட அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் இன்று காலை பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் சலாம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறோஸா நக்பர், அல் ஜெஸீறா பாடசாலை அதிபரும் ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயல் பேஷ் இமாம் என்.எம்.ஹபீல் மௌலவி மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர், உதவி அதிபர்கள், பாடசாலையின் அபிவிருத்திச் சங்க செயலாளர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் தரம் ஒன்று மாணவர்களுக்கான ஏடு தொடக்கத்தினை ஆரம்பித்து வைத்தனர்.









0 Comments