Subscribe Us

சாலையில் வெடித்து சிதறிய கார்: நொடிகளில் உயிர் தப்பிய பச்சிளம் குழந்தை (வீடியோ இணைப்பு)

கனடாவில் வாகனம் ஒன்று தீப்பிடித்து வெடித்து சிதறுவதற்கு முன்பு, அதில் இருந்த தம்பதியர், பிறந்து 3 வாரங்களே ஆன தங்கள் குழந்தையுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
வன்கூவரில் சரே என்ற இடத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் தம்பதிகள் ஒருவர் வால்மார்ட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது குழந்தையின் தாய் சிந்தியா ஜனிசிற்கு புகை நாற்றமடித்துள்ளது. அதனை அவர்கள் பெரிது படுத்தவில்லை.
பின்னர் கார் சிறிது தூரம் சென்றதும், புகை காரின் டாஷ்போட்டிற்குள் இருந்து வந்து கொண்டிருந்ததை உணர்ந்ததோடு தீப்பொறிகளையும் கண்டுள்ளனர்.
இதையடுத்து உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு பச்சிளம் குழந்தையை எடுத்து கொண்டு வெளியேறி உள்ளனர்.
இவ்வாறு இவர்கள் வெளியேறிய சில விநாடிகளில் வாகனம் தீப்பிடித்து எரிந்ததுடன் பல வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இதுபற்றி அந்த குழந்தையின் தாய் சிந்தியா கூறுகையில், வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திய பின் எல்லாம் நடந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதோடு குழந்தை சம்பவம் நடந்த நேரம் முழுவதும் உறக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments