இலங்கையின் தேர்தல் அந்த நாட்டு மக்களால் வெற்றி கொள்ளப்பட்டது, அது இந்திய புலனாய்வுப்பிரிவான றோவினால் வெற்றி கொள்ளப்படவில்லை என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜூடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் நேற்று இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துரைத்த மங்கள சமரவீர,
இலங்கையின் எதிரணியினருக்கு ஆதரவு வழங்கிய காரணத்தினாலேயே இலங்கையில் இருந்த றோ அதிகாரி ஒருவர் திருப்பியழைக்கப்பட்டார் என்ற செய்தியை மறுத்தார்.
இந்த செய்தியில் எந்த உள்ளடங்களும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே இந்த செய்தியை இந்தியாவும் உத்தியோகபூர்வமாக மறுத்திருந்தது.
இதேவேளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பு குறித்து கருத்துரைத்த மங்கள சமரவீர, இலங்கையின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்கள் செய்யவேண்டியிருப்பதாக குறிப்பிட்டார்.


0 Comments