புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வுக் குழுவின் மூத்த உறுப்பினரும் , ஓய்வு பெற்ற பட்டயம் பெற்ற போரியியளலருமான ஜனாப். எம்.ஐ.எம் .ஜிப்றி சற்று முன்னர் புத்தளம் பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நண்பகல் புத்தளம் நகரில் இடம் பெற்ற வன்முறையோடு சம்பந்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வுக் குழுவினரின் புத்தளம் மக்கள் அனைவரையும் வாக்களிக்குமாறு துண்டுப்பிரசுர வியோகத்தில் இந்தக்குளுவினருடன் அமைதியாக பணிகளில் ஈடுப்பட்டிருந்த ஜனாப். ஜிப்ரி அவர்களே பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக P.P.A.F. அமைப்பாளர் ஒருவரும் கூறினார்.
நேற்றைய துண்டுப் பிரசுர விநியோகத்தின் போது ஜிப்ரி உற்பட இந்த அமைப்பின் எந்த உறுப்பினரும் வன்முறையில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று இடம் பெற்ற வன்முறையின் போது இந்தக் குழுவைச்சேர்ந்த கல்வியாளர்களான பொறியியலாளர் ரின்சாத் , தொழில் நுட்பவியலாளர் ருஸ்தி , வர்த்தகர் ரியாஸ் ஆகியோர் மீது ஆளும் கட்சியின் குண்டர்கள் கடும் தாக்குதல்களை மேற்கொண்டதால் இந்த உறுப்பினர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments