Subscribe Us

header ads

விபத்துக்குள்ளான எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டியிலிருந்தான சமிக்ஞைகள் அவதானிப்பு

ஜாவா கடலில் மூழ்கிய எயார் ஏசியா கியூ.இஸட்.8501 விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் சமிக்ஞைகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசிய ஆயுதப்படையினரின் கட்டளைத் தளபதி ஜெனரல் மோல்டோகா தெரிவித்தார்.
கடலின் ஆழத்தில் ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்ட விமானத்தின் வால் பகுதிக்கு அண்மையிலிருந்து மேற்படி சமிக்ஞைகள் அவதானிக்கப்பட்டதால் கறுப்புப் பெட்டி அந்த பாகத்தினுள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 162 பேருடன் மேற்படி விமானம் காணாமல் போயிருந்தது. இதுவரை 46 பயணிகளது சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
அந்த வால் பகுதி உடையும் நிலையில் உள்ளதாக ஜெனரல் மோல்டோகா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.அந்த விமானத்தின் வால் பகுதி ஆளற்ற நீர்மூழ்கி உபகரணம் மூலம் கடலில் 30 கிலோ மீற்றர் ஆழத்தில் கடந்த புதன்கிழமை அவதானிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments