Subscribe Us

பொலிஸ்காவலில் ஏற்படும் மரணங்களை நிறுத்த புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வுள்ளது- நீதியமைச்சா்

பொலிஸ் காவலில் ஏற்படும் மரணங்களை நிறுத்துவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாசராஜபக்ச, பொலிஸ் மற்றும் நீதிமன்ற காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியுள்ளார். சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ள நாடொன்றில் இவ்வாறு பொலிஸ் தடுப்புக்காவலில் மரணங்கள் நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்,

பொலிஸ் காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சிவில் அமைப்புகளுடைய பங்களிப்பும் கோரப்படும்,இது குறித்து அரசாங்கம் அலட்சியமாக இருக்க முடியாது,பொலிஸ் காவலில், தடுப்புக்காவலில், நீதிமன்ற பாதுகாப்பில் மரணங்கள் ஏற்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்பதே அடிப்படை உண்மை

சர்வதேச சமூகத்தினர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,சிவில் அமைப்பினர் என பலர் தங்கள் கரிசனைகளை வெளியிட்ட போதிலும் முன்னைய அரசாங்கம் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. பல முக்கிய சம்பவங்களில் தொடர்புபட்டிருந்த சந்தேக நபர்களும் மர்மமான முறையில் கடந்த காலங்களில் மரணித்துள்ளனர்.

நவம்பர்2012 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்கு அரசாங்கம் பயன்படுத்திய முறைகள் குறித்து புதிய விசாரணைகள் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். -GTN-

Post a Comment

0 Comments