சகல அரசாங்க அதிகாரிகளும் நீதியுடனும் மனசாட்சிக்கு உண்மையாகவும் வேலை செய்தால் சிறந்த நாட்டை நிர்மாணிப்பது பெரியதொரு வேலை இல்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.
மொனராகலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் புதிய உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாராவது தன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொண்டால் அவர்கள் மதங்களின் சார்பாக வாழ்பவர்களாகும். மனச்சாட்சிக்கு உண்மையாக வேலை செய்தால் அவர்கள் சிறந்த அரசியல் கட்சி கொள்கையின் படி வேலை செய்பவர்களாகும்.
மனசாட்சிக்கு உண்மையாக வேலை செய்தால் அவர்கள் அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களின் படி வேலை செய்பவராகும்.
எனவே அரசாங்க அதிகாரிகளான நாங்கள் அனைவரும் மனச்சாட்சிக்கு உண்மையாகவும் நீதிக்கு உண்மையாகவும் செயற்பட்டால் எங்கள் நாட்டை சிறந்த நாடாக மாற்ற முடியும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.


0 Comments