-ஜே.எம்.ஹபீஸ்-
கண்டி- கம்பளை பிரதான வீதியில இடம் பெற்ற முச்சக்கரவண்டி வண்டி –டிப்பர் மோதலில் ஐவர் படுகாயமடைந்தள்ளதுடன் இரண்டு நாள் கைக்குழந்தை ஒன்று மயிரிழையில் தப்பியுள்ளது.
(17.1.2015) பேராதனை வைத்திய சாலையில் குழந்தைப் பிரசவத்தை அடுத்து வைத்திய சாலையிலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு குடும்ப அங்கத்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
கெலிஓயா, வெலிகல்ல பகுதியில் மணல் ஏற்றும் டிப்பர் வண்டி ஒன்று மேற்படி முச்சக்கரவண்டியில் மோதியதால் முச்சக்கரவண்டி கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதுடன் அதன் சாரதியும் படுகாயமடைந்துள்ளார்.
வண்டியில் பயணித்த சிறுவர் உற்பட மற்றும் நால்வர் மயக்கமுற்ற நிலையில் பேராதனை வைத்திய சாலையில் அனுமதிக்ப்பட்டு அங்கிருந்து கண்டி வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டனர்.
ஆனால் இரண்டு நாள் வயதுடைய கைக்குழந்தை எதுவித பாதிப்புமின்றி தெய்வாதீனமாகப் தப்பியுள்ளது. கைக்குழந்தையும் மற்றவர்களும் வீதியில் வீசப்பட்ட நிலையில் அயலவர்கள் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கெலிஓயா கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரிய குடும்பத்தினர்களாகும். இது தொடர்பாக பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


0 Comments