Subscribe Us

header ads

சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாட்டுப் பயண தடை.


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன மற்றும்  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட்கப்ரால் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க இதனை அறிவித்துள்ளார்.

லஞ்ச ஊழல் திணைக்களத்தின் அறிவிப்பின் பிரகாரம் இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments