மஹிந்த ராஜபக்ச அரசை கடுமையாக விமர்சித்து
வந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையின் பின்னணியில் கோத்தபாய
ராஜபக்சவே இருப்பதாக அண்மையில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா
மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்
கோத்தபாயவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெறுவதற்கான
முன்னெடுப்புகள் இடம்பெற்று வருவதாக தகவல் அறியமுடிகிறது.
நேற்றைய தினமே அமைச்சரவை பேச்சாளர் ராஜித
சேனாரத்ன பழைய கொலைக் கோப்புகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவித்திருந்த
நிலையில் தற்போது லசந்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகவிருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.


0 Comments