மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரதமர் ரணில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ள வரவு செலவு திட்டத்தில் பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றது.
முன்னதாக தற்போதைய மின்சக்தி எரிபொருள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தங்கள் அரசாங்கத்தில் பெற்றோல் விலையை நூறு ரூபாவாக குறைப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இது தொடர்பாக நேற்று அவர் குறிப்பிடுகையில் முன்னதாக மஹிந்த அரசு கைச்சாத்திட்டுள்ள சில ஒப்பந்தங்கள் காரணமாக உடனடியாக எரிபொருள் விலைகளை குறைக்கமுடியாது ஆனால் வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுந்திர தினத்துக்கு சமீபமாக விலை குறைப்பை செய்யமுடியும் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே உலக சந்தையில் கனிய எண்னை பெரல் ஒன்றின் விலை ஐம்பது டொலருக்கு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வரும் தினங்களில் இது வரலாற்றில் இல்லாத அளவுக்கு இருபத்து ஐந்து டொலருக்கு வீழ்ச்சியடையும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று அல்லது நாளை முதல் கனிய எண்னை விலை பரியாளவு வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த விலை வீழ்ச்சி புதிய அமைச்சரவை எரிபொருள் விலைகுறைப்புக்கு பிரதமர் ரணிலின் கிடைக்கும் பம்பர் பரிசு எனவும் இயற்கையும் புதிய அரசுக்கு உதவி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


0 Comments