ஜனாதிபதித் தேர்தல் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பாக முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் அவரது மகன் உட்பட ஐவருக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துளளது.
ஜனாதிபதி தேர்தல் தினத்தின் போதுபொது வேட்பாளரின் காரியாலயம் ஒன்றைத் தாக்கியது, அனுமதியின்றி உட்பிரவேசித்தல், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை என்பவை தொடர்பாக முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவின் புதல்வரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அனுராதா ஜயரத்ன மற்றும் கம்பளை நகரசபை உறுப்பினர்கள் இருவர், உடபலாத்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஐவர் மீது குற்றம் சாட்டப்படடுள்ளது.
கம்பளை நீதிவான் உபுல் ராஜகருணா மேற்படி சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ளார். இச்சம்பவத்ததுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர் தர்சன நயன தரங்க என்பவர் மட்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய சந்தேக நபர்களையும் தொடர்புடைய வாகனங்களையும் பொலிசார் தேடிவருகின்றனர்.


0 Comments