தேர்தல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட இடங்களின் அதிகாரத்தை பிடிக்குமாறும் இராணுவம் அவற்றுக்குள் செல்லும் போது எந்த இராணுவப் படைப் பிரிவு என்பதை அடையாளம் காண முடியாதபடி சீருடையில் இருக்கும் பதக்கங்களை அகற்றுமாறும் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்தாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
எனினும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான தினம் இரவு அலரி மாளிகைக்கு சென்றிருந்தவர்களில் சிலர் கோத்தபாயவின் அந்த உத்தரவை ஏற்க மறுத்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றி பேசியதாக உதய கம்மன்பில கூறுகிறார். தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நேரத்தில் ஏன் அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். ஏன் இந்த குழப்பம்.
மட்டக்குளி ரொக் ஹவுஸ் முகாமிற்கு 3 ஆயிரம் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். நியூன்ஹெல்ல என்பவரும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஒருவரும் அங்கு இருந்தனர்.
சீருடையில் உள்ள பெஜ் மற்றும் தொப்பில் உள்ள பெஜ்களை அகற்றுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அவை இருந்தால், எந்த படைப் பிரிவு என்பதை அடையாளம் கண்டு விடலாம் என்பதே இதற்கு காரணம்.
எனினும் அலரி மாளிகையில் அந்த நேரத்தில் இருந்த சிலர் இராணுவ சதித்திட்டத்தை ஏற்க மறுத்தனர். இந்த சம்பவத்தை உறுதிப்படுத்த சாட்சியங்கள் இருக்கின்றன எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
0 Comments