மஹஓய - வீரன்தலாவ பிரதேசத்தில் புதையல் தோண்ட முற்பட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மஹஓய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்து புதையல் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்களை தெஹியத்தக்கண்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஹஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments