Subscribe Us

விமல், மைத்ரிக்கு ‘லைட்டா’ பச்சைக்கொடி காட்டினார்.

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் ஆனால், அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் எண்ணம் இல்லை எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் இணையபோவதில்லை. ஏனெனில் அவரது அரசியல் கொள்கையில் எமக்கு உடன்பாடில்லை.

அதனால்தான், நாங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிகொண்டிருக்கின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 5.7 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு தாவுவதனூடாக நாங்கள் அவர்களுக்கு துரோகம் செய்ய நினைக்கவில்லை.

ஆனால், அரசாங்கத்தின் 100 நாட்கள் ;திட்டத்துக்கு ஆதரவு வழங்குவோம். ‘அரசியலமைப்பில் மாற்றம், தேர்தல் சீர்திருத்தங்கள், வாழ்க்கைச் செலவு குறைப்பு, எண்ணெய் விலைகளின் குறைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் இந்த 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதால் அதற்கு நாங்கள் ஆதரவளிக்கவுள்ளோம்;’ என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ‘ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவுக்கும் இடையிலான அரசியல் கொள்ளைககள் வேறுபட்டது என்பது தெளிவாக தெரிகின்றது. இருவரினது அரசியல் கொள்கைகள் ஒன்றாக இருந்திருந்தால் மஹிந்தவுக்கு ஆதரவளித்த 5.7 மில்லியன் மக்களும் ஜனாதிபதி மைத்திரபாலவுக்கும் ஆதரவளித்திருப்பார்கள்.

அதனால், ‘எமது உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு மாறி எம்மை நம்பிய மக்களுக்கு துரோகம் இழைப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments