இலங்கை கடற்படையில் யோஷித ராஜபக்ஷ இணைத்துக்கொள்ளப்பட்ட முறை தொடர்பிலும் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கடற்படை கற்கைநெறி கல்லூரியில் புலமைப் பரிசில் பெற்று இரண்டு வருட கற்கை மேற்கொண்டமை தொடர்பிலும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியினர், பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவிடம் கோரியுள்ளனர்.
இது தொடர்பில், பாதுகாப்பு செயலாளரிடம் மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றப்பத்திரம் ஒன்றினை கையளித்துள்ளனர் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


0 Comments