Subscribe Us

header ads

சிறிலங்கா எயார்லைன்ஸ் - மிஹின் லங்கா ஒன்றாக இணைப்பு


வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடு சென்று அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்கள் இலங்கையின் அபிவிருத்தி ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 

சிறிலங்கா எயார்லைன்ஸ் கடந்த 5 வருடங்களில் 100 பில்லியன் நட்டத்தையும் மிஹின் எராய் 5 வருடங்களில் 15 பில்லியன் நட்டத்தையும் எதிர்கொண்டுள்ளதால் இவற்றை எதிர்காலத்தில் தவிர்க்கும் வகையில் இவ்விரு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யும் கட்டணம் 5000 ரூபாவாக குறைக்கப்படும் என்றும் முதியவர்களுக்கு விசேட பஸ் கட்டணம் அறவிடப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். 

ஊடக விளம்பரங்கள் செய்யும் போது அமைச்சுக்கள் அரச நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் அநாவசிய விளம்பரங்கள் அதிக செலவில் செய்யப்படுவதாகவும் அவ்வாறு செய்யப்படும் செலவும் அரசியல் வாதிகளால் தனிப்பட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார். 

கடனட்டை வரி 8% குறைக்கப்படும் என்றும் படிகள் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments