தேர்தல் தினத்துக்கு அடுத்த நாள் அதிகாலை இராணுவப்புரட்சி மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட சம்பவத்தின் போது அலரி மாளிகையில் இருந்தவர்கள் யார் என்பதை மறந்து விட்டதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது ஏற்கனவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கூறியதை போன்று கொலை சம்பவம் தொடர்பில் “ஞாபகம் இல்லை” என்பதை நினைவுப்படுத்துவதாக தலைநகர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அலரி மாளிகையில் குறித்த வேளையில் நடந்தவை தொடர்பில் மேல்மாகாணசபை உறுப்பினர் கம்மன்பிலவவிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் துறையினர் வாக்குமூலத்தை பெற்றனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த கம்மன்பில, குறித்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய, முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் போன்றோர் இருந்ததாக தெரிவித்தார். எனினும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இருந்தமை தொடர்பில் தமக்கு ஞாபகம் இல்லை என்று அவர் கூறினார்.
இதனையே தலைநகர் ஊடகம் துமிந்த சில்வாவின் குணங்குறி கம்மன்பிலவுக்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது


0 Comments