முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் 59வது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு கொலன்னாவையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, விஜேதாஸ ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க, பைசர் முஸ்தபா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

0 Comments