அமானி சாரா
கற்பிட்டி பிரதேச சபையில் கடமையாற்றுவதற்கென 35 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் இன்று வழங்கப்பட்டது. இந் நிகழ்வு நுரைச்சோலையில் தற்காலிகமாக இயங்கி வரும் கற்பிட்டி பிரதேச சபையின் கட்டிடத்தில் நடைபெற்றது.
கற்பிட்டி பிரதேச சபையில் பல வருடங்களாக தற்காலிகமாக கடமைகளில் ஈடுப்பட்டு வந்த 35 ஊழியர்களுக்கே இந் நியமனம் வழங்கப்பட்டது. இதன் மூலம் குறித்த ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கற்பிட்டி பிரதேச சபைத்தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ்தெரிவித்தார்.
கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் எம்.எச்.எம். மின்ஹாஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








0 Comments