Subscribe Us

களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கல்வி எழுச்சி வாரம்– 2015

“களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் கல்வி எழுச்சி வாரம் 2015” மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தம் நோக்கத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ;,  Rise & Shine  அமைப்பு எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் ஒருவார காலத்துக்கு கல்வி எழுச்சி வாரம் ஒன்றைஅனுஷ்டிக்கவுள்ளது. 

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம் திட்டமிடப்பட்டுள்ள இந்தநிகழ்ச்சிதிட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,சமுகநல அமைப்பை சேர்ந்தவர்கள் என பல தரப்பட்ட தரப்பினருக்கம் வௌி வேறு நிபுணத்துவம் பெற்ற வளவாளர்கள் செயலமர்வுகளை நடாத்தவுள்ளனர். 

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி தொடக்கம் கல்லூரியிலிருந்து களுத்துறை பிரதேசத்தின் “கல்வி எழுச்சி நடை பவணி’’ (Walk For Education) ஒன்றை பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

 இதில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் சகலரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மேற்படி நிகழ்வுகள் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் சிரேஷ்ட ஒளி, ஒலிபரப்பாளர் அல்- ஹாஐ; A.R.M. Jiffry அவர்களின் தலைமையில் இடம் பெறவுள்ளது.

Post a Comment

0 Comments