1990 இல் விடுதலைப் புலி பயங்கரவாதிகளால் பலவந்தமாக வௌியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் வரலாற்றை இளம் தலைமுறை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது எதிர்கால வட மாகாண சமூக அரசியல் வாழ்விற்கு மிக முக்கியமானதொன்றாகும்.
துயரம் நிறைந்த அந்த வாழ்வு முடிந்து மீண்டும் செந்த இடங்களில் 'மீளக் குடியேறியவர்களது வாழ்வு' சில நேரங்களில் அகதி வாழ்வை விட மோசமாகி வரும் சூழலை விளங்கிக் கொள்ளவும் இவ்வரலாற்றை அறிந்திருப்பது இன்னொரு வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
சமூகங்களுடனான புரிந்துணர்வு மற்றும் இணக்கப்பாடுகளுக்கு இத்துரோகங்கள் மறக்கப்பட்ட நிலையில் சாத்தியமில்லை.
வடக்கு முஸ்லிம்களின் வௌியேற்றம் என்ற இன அழிப்பு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் கூட மறக்கப்பட கூடியதல்ல என்பதை முஸ்லிம்கள் என்ற வகையில் நாம் உறுதியாயிருக்க வேண்டும்.
அவ்வாறே புலிகளின் அழிவோடு இவ்வரலாற்றை மறந்து கொஞ்சிக் குலாவும் அளவிற்கும் தேனும் பாலுமாக கலப்பதிற்கில்லை.
புலிகள் யாரின் பெயரில் கொடுமைகளை அரங்கேற்றினார்களோ, அல்லது புலிகளுக்காக யாரல்லாம் அரசியல் செய்தார்களோ, புலிகளை யாரெல்லாம் பிரதிநிதிதுவப் படுத்தினார்களோ அவர்களிடமிருந்தும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் பலவீனப்படுத்தப்படுகிறது.
அரசியல், சிவில் நிர்காகக் கட்டமைப்பினுள் இன்னமும் புலிச் சிந்தனை இளையோடியுள்ளதையும் முஸ்லிம் புறக்கணிப்பையும் தெளிவாக உணரக்கூடியதாகவுள்ளது.
இப்பின்னணியில் வடக்கு முஸ்லிம்களின் வௌியேற்ற நிகழவின் பின்னரான பாதிப்புக்கள் இழப்புக்கள் குறித்தும் இவற்றுக்ககான பரிகாரமாக அரசியல் ரீதியாகவோ சிவில் குழுக்களோ எவ்வாறான நடவடிக்கைக்கான சிந்தனைப் போக்கைக் கொணடிருக்கின்றன என்பது குறித்து ஆழமான பார்வை முக்கியமாகின்றது.
ஒரு முக்கியத்துவ மிக்க அரசியல் சூழலில் வட மாகாண முஸலிம்களின் மீது புலிகளால் மேற்கொள்ளபட்ட்ட இனச் சுத்திகரிப்பின தொகுப்பை மிகச் சுருக்கமான வரலாற்று வாசிப்பாக 'எம். மஸ்தான் ஆசிரியர் எழுதியுள்ள ஒரு நூலை முஸலி இளைஞர் ஒன்றியம் வௌியடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
உண்மையில் இந்நூல் பூரணமானதல்ல. 1990 நிகழ்வுகளின் தொகுப்பு மற்றும் அகதி வாழ்வு தொடர்பாக அடிப்படை நிகழ்வுகளை தொகுத்து எழுதப்பட்டுள்ளது.
இதன் அடுத்தடுத்த 'பார்வைகள்' தொடர்பான மேலும் சில நூல்கள் எதிர்காலத்தில் வெளிவரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
இந்நூலோடு கவிஞர் இஸ்வர்தீன் எழுதிய அணையாத அலைகள் என்ற கவிதைத் தொகுப்பும் வௌியிட்டு வைக்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முஸலி யில் இடம் பெறவுள்ளது.
நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் நண்பர்களை அழைக்கிறோம்.


0 Comments