Subscribe Us

பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் 1 இற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா(PHOTOS)

பி. முஹாஜிரீன்

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் 1 இற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று (20) நடைபெற்றது.

அல் ஹிக்மா வித்தியாலய அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளரும் பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளருமான பி.எம். அபுல்ஹஸன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

புதிய மாணவர்கள் தரம் 2 மாணவர்களால் மாலை அணிவித்து மலர் தூவி வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களது கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. புதிய மாணவர்களக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் யூ.எல்.எம். இப்றாஹீம் புதிய மாணவர்களுக்கு சம்பிரதாயபூர்வமாக ஏடு துவக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இவ்விழாவில், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் மௌலவி எஸ்.எம். நளீம், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முனாபீர், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.பர்வின் உட்பட ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.









Post a Comment

0 Comments