பைஷல் இஸ்மாயில்
முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளின் ஒற்றுமையினாலும் தீர்க்கமான கருத்துக்களின் முடிவினாலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தலைவர் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.
தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இந்த தீர்மானம் நேற்றும் நேற்று முன்தினமும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் ஆகியோர் இணைந்து ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு முடிவு செய்துள்ளதாகவும் இந்தத் தீர்மானத்தை தலைவர் ஹக்கீம் உயர்பீடத்தைக்கூட்டி அறிவிக்கவுள்ளதாகவும் மேலும் அறியமுடிகின்றது.
தற்போதைய ஆளுங்கட்சிக்கு முஸ்லிம்கள் ஏன் வாக்களிக்க கூடாது என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் சில உண்மைத் தகவல்களை கண்டியில் இடம்பெற்ற மக்கள் பிரதிநிகள் சந்திப்பின் போது சுட்டிக்காட்டினர்.
இவ்வாறு மு.காவின் மக்கள் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டு கீழ்வரும் சம்பவங்களை நடாத்திய நபர்களை இந்த அரசாங்கம் யாரையாவது கைது செய்துள்ளதா???
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடாத்திய மிக மோசமான தாக்குதல்கள் இடம்பெற்ற திகதியுடன் இங்கே….

1. 2013.01.09 ஆம் திகதி அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
2. 2013.01.26 ஆம் திகதி இரத்தினபுரி 150 பௌத்ததேரர்களைக் கொண்ட குழு ஜெய்லானி பள்ளிவாயலைத் தாக்குவதற்கான முயற்சி.
3. 2013.02.09 ஆம் திகதி மாத்தறை கந்தர பள்ளிவாயல் தாக்குதல்.
4. 2013.02.10 ஆம் திகதி குருநாகல் நாரம்மல பள்ளிவாயலுக்கு "சுபஹ்" தொழுகைக்காக சென்றவர் தாக்கப்பட்டார்.
5. 2013.02.22 ஆம் திகதி காலி ஹிரும்புற முஹ்யித்தீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
6. 2013.02.28 ஆம் திகதி கேகாலை ஜூம்ஆ பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.
7. 2013.03.03 ஆம் திகதி இரத்தினபுரி ஓபநாயக்க பள்ளிவாயல் தாக்குதல்.
8. 2013.03.03 ஆம் திகதி கம்பஹா மஹர பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
9. 2013.03.05 அம் திகதி கம்பஹா மஹர பள்ளிவாயலை மூடுமாறு அமைச்சர் உத்தரவு.
10. 2013.03.28 அம் திகதி கொழும்பு பெபிலியான பிரதேசத்தில் அமைந்துள்ள பெஷன் பக் நிறுவனம் தாக்கப்பட்டது.
11. 2013.04.16 ஆம் திகதி கண்டி கம்பளை நகரில் முஸ்லிம் சகோதரருக்கு சொந்தமான லக்கிஎம்போரியம் தாக்கப்பட்டது.
12. 2013.07.01 ஆம் திகதி மட்டக்களப்பு நாவலடி மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாயல்தாக்கப்பட்டது.
13. 2013.07.17 ஆம் திகதி கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்கப்பட்டது.
14. 2013.09.15 ஆம் திகதி திருகோணமலை புல்மோட்டைப் பிரதேசத்தில் முஸ்லீம்களுக்குசொந்தமான 1500மேற்பட்ட ஏக்கர் காணிகளை பௌத்த கோவில் அமைப்பதற்காக கையகப் படுத்தப்படுத்தப்பட்டமை.
15. 2013.11.08 அம் திகதி மாத்தறை இஸ்ஸதீன் மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுத் தக்வாபள்ளிவாயலின் பதிவினை புத்தசாசன அமைச்சு இல்லாமல் செய்தது.
16. 2013.11.17 ஆம் திகதி அநுராதபுரம் கெக்கிராவ U9, வீதியில் அமைந்துள்ள ஜூம்ஆபள்ளிவாயல் காடையர்களால் தாக்கப்பட்டது.
17. 2013.12.01 ஆம் திகதி மொறட்டுவ பல்கலைக் கழகம் முஸ்லிம் மாணவிகள் நிகாப் அணிந்து வருவதை தடைசெய்தது.
18. 2013.12.12 ஆம் திகதி தெகிவளை பொலிஸ் நிலையம் தாருஷ்ஷாபிஈ பள்ளிவாயலில்தொழுகை நடாத்துவதை நிறுத்துமாறு உத்தரவிட்டது.
19. 2013.12.15 ஆம் திகதி தெகிவளை அத்திடிய மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹிபாபள்ளிவாயலில் தொழுமை நடாத்துவதை நிறுத்துமாறு தெகிவளைப் பொலிஸ் நிலையத்தினால் கோரப்பட்டது.
20. 2013.12.31 ஆம் திகதி அம்பதென்ன கண்டி அம்பதென்ன மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாயலுக்குதாக்குதல்.
21. 2014.01.04 ஆம் திகதி தம்புள்ளை பள்ளிவாயலைச் சுற்றி வாழ்ந்த சுமார் 107 குடும்பங்கள்வெளியேற்றப்பட்டனர்.
22. 2014.01.05 ஆம் திகதி போதைப் பொருட்களை கடத்துவதற்காக முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா பயன்படுத்தப்படுகிறது என BBS பகிரங்கமாக அறிக்கையிட்டது.
23. 2014.01.07 ஆம் திகதி முற்று முழுதாக ஹலால் முறையினை ஒழிக்க வேண்டுமென பத்திரிகையாளர் மாநாடு நடாத்தப்பட்டது.
24. 2014.01.19 அம் திகதி மாவத்தகம பள்ளிவாயலுக்கு முன்னால் காணப்பட்ட அமைதி என்றபலகை தீக்கிரையாக்கப்பட்டது.
25. 2014.02.13 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அமைந்திருந்த முஸ்லிம்களுக்கான தொழுகை அறை மூடப்பட்டது.
26. 2014.02.19 ஆம் திகதி கண்டி D.S. சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள ஜின்னா பள்ளிவாயல்குண்டர்களால் தாக்கப்பட்டது.
27. 2014.03.22 ஆம் திகதி கேகாலை மாவனல்லை நகரில் ஹஸன் மாவத்தை எனக் காணப்பட்ட பெயர்ப்பலகையை அநகாரிக தர்மபால மாவத்தை என பலவந்தமாக மாற்றியமை.
28. 2014.03.26 தம்புள்ள நகர பள்ளிவாயலுக்கு இரு கைக்குண்டுகள் வீசப்பட்டன.
29. 2014.04.08 மன்னார் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை அச்சுறுத்தும் வகையில் BBSவில்பத்து சரனாலயத்திற்குச் சென்று முஸ்லீம்களை அச்சுறுத்தியமை.
30. 2014.04.23 ஆம் திகதி BBS அமைப்பு றிசாட் பதியுதீன் அவர்களின் அமைச்சுக்குள் சென்றுஅட்டகாசம்.
31. 2014.05.09 ஆம் திகதி அளுத்கம நகரில் அமைந்துள்ள கடைகளுக்கு தீ வைப்பு.
32. 2014.05.28 ஆம் திகதி மாவனல்ல மஸ்ஜித் தாருல் ஹிக்மாவை மூடுமாறு இரண்டு பௌத்ததேரர்கள் உத்தரவு.
33. 2014.06.21 ஆம் திகதி பாணந்துறை நோலிமிட் வர்த்தக நிலையம் முற்றாகதீக்கிரையாக்கப்பட்டது.
34. நோன்பு காலத்தில் கிறீஸ் யக்காவினை முஸ்லிம் ஊர்களில் உலாவவிட்டு பெண்களைபயமுறுத்தி, கிறீஸ் யக்காவினை இராணுவ முகாம்களில் மறைத்து வைக்கப்பட்டமை.

0 Comments