யாப்பாவின் தனி நாடும்
ராஜபக்ஸவின் கிழக்கிஸ்தானும் -
எம்.ஐ. முஹம்மத் றணுஸ்
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்
இன்று வெளியான டெய்லி நியூஸ் பத்திரிகையில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பெற்றோலிய கைத் தொழில் துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ள செய்தி இப்படி பிரசுரமாகியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையான தனி நாட்டுக் கோரிக்கை போன்ற ஒன்றைக் கேட்கின்றார்கள்.அவர்கள் கேட்ட கரையோர நிர்வாக மாவட்டம் புலிகள் கேட்ட தமிழ் ஈழம் போன்ற ஒன்றே.
இதே போன்ற கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கிஸ்தான் கோருவதைத் தன்னால் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார்.
இவ்விரண்டு பொறுப்புணர்ச்சி அற்ற கருத்துக்களுக்கும் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பொறுப்புணர்ச்சியுடன் எனது மறுப்பு அறிக்கையினையும் கண்டனத்தையும் பதிவு செய்கின்றேன்.
அப்பாவி சிங்கள மக்களின் வாக்குகளைப் பறிப்பதற்கு இன்று அரசாங்கமே அவர்களுக்குப் புலிப்பயம் காட்டுகின்றது.சிறுபான்மை மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வித்தியாசமான அர்த்தங்களை கற்பித்து அப்பாவி சிங்கள மக்களைப் பயமுறுத்தி அவர்களின் வாக்குகளைப் பெற அரசாங்கம் வங்குரோத்து அரசியல் செய்கின்றது.
கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை அமைப்பதற்கு 2012 ம் ஆண்டு கரையோர நிர்வாக மாவட்டம் தருவதாக வாக்களித்த இந்த அரசு 2014ம் ஆண்டு அதனை இன்று தனி அரசாக சித்தரிக்கின்றது.
1987ம் ஆண்டு மங்கள முனசிங்க தெரிவுக்குழு சமர்ப்பித்த அறிக்கையில் ஒரு பரிந்துரையாக காணப்பட்ட இந்தக் கரையோர நிர்வாக மாவட்டக் கோரிக்கை தலைவர் அஷ்ரப் காலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தின் 70 சதவீதத்துக்கும் அதிகமான சனத்தொகையாகத் திகழும் தமிழ் மொழி பேசும் மக்களின் மொழி உரிமை அம்பாறை மாவட்டத்திலேயே அவர்களுக்கு கிடைக்கவில்லை இந்த கௌரவ அமைச்சருக்குத் தெரியுமா....?
பிந்தனைப் பற்றுப் பகுதிகளான தெகியத்த கண்டி,பதியத்தலாவ, மஹா ஓயா ,தமண போன்ற தபோதைய பிரதேச செயலகப் பிரிவுகளை எந்த நியாயமுமில்லாது நமது வேவகம்பற்றோடு இணைத்ததை நியாயப்படுத்த இந்த அமைச்சருக்கு முடியுமா.....?
முஸ்லிம,் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இம்மாவட்டத்தின் தலை நகரான அம்பாறை நகரினிலே முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு கடை அறையினைக் காட்ட இந்த அமைச்சருக்கு முடியுமா?
அம்பாறை மாவட்டத்தின் ஆக்கிரமிக்கப் பட்ட முஸ்லிம்களின் கரங்கா ,வட்டமடு மற்றும் எல்லைப்புற குடியேற்றக் காணிகளை மீளப் பெற்றுத் தர முடியுமா.....?ஆகக்
குறைந்தது எமது எல்லைப் பிரதேசங்களில் உள்ள காணிகளை மட்டுமல்ல நாடு ஊருக்குள் நாய்க் கிளைகள் போன்று சுற்றித் திரியும் கட்டாக்காலி காட்டு யானைகளுக்காவது வேலி இட்டுத்தர இந்த வக்கற்ற அமைச்சருக்கு முடியுமா.....?
குறிப்பிட்ட மொழி பேசும் ஒரு மக்கள் கூட்டத்துக்கு நிர்வாகம் செய்ய அனுப்பப்படும் ஒரு நிர்வாக அதிகாரி அந்த மக்களின் மொழி ,கலாச்சாரப் பின்னணிகளை அறிந்தவராக இருப்பது மக்களுக்கு வினைத்த்திறனுள்ள சேவையை வழங்க வாய்ப்பாகும் என்பதை ஏற்று ஒரு தமிழ் பேசும் ஒருவரை அம்பாறை மாவட்ட அரச அதிபரை நியமிக்க இந்த அமைச்சர் தயாரா.....?
செனரத் மன்னன் காலத்தில் இருந்தும் அதற்க்கு முன்பிருந்தும் இம்மாவட்டத்தின் காவலர்களாகவும் மைந்தர்களாகவும் இருந்தவர்களும் தீகவாபி புனித பிரதேசத்தைக் கட்டிக் காத்தவர்களும் நாங்கள் என்பதை இந்த அமைச்சர் அறிவாரா........?
அம்பாறை மாவட்டத்துக்கு தமிழ் பேசும் உதவி அரசாங்க அதிபரும் பிரத்தியேக காரியாலயமும் என்றால் ஏன் மற்ற எல்லா மாவட்டங்களுக்கும் அந்த ஏற்பாடு இல்லை.....?
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வையும் பெற்றுத்தராது அந்த மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களின் அடையாள இருப்பைச் சூறையாடும் இந்த அரசின் முதுகெலும்பற்ற நிலையை மறைப்பதற்கு இன்று இலங்கை முஸ்லிம்கள் கிழக்கிஸ்தான் கேட்கிறார்கள் என்றும் தனி நாடு கேட்கிறார்கள் என்றும் இன்று அப்பாவி சிங்கள மக்களைப் பயமுறுத்தி அவர்களின் வாக்குகளைத் திருட வேண்டாம்...
தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டங்கள் அநியாயமாக நியாயமற்ற முறையில் அடக்கப்பட்ட போததான் ஈழக் கோரிக்கையாக பரிணாமம் அடைந்ததை இந்த நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா அவர்களுக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

0 Comments