நல்லெண்ண விஜயமாக இந்திய கடற்படை கப்பலான “சுகன்யா” கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது
இந்தக் கப்பலை இலங்கையின் கடற்படை வரவேற்றது.
இந்த கப்பலின் கட்டளை அலுவலராக துரைபாபு செயற்படுகிறார்.
இந்தநிலையில் அவர் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.
சுகன்யா, 1890 தொன் எடைகளை கொண்டது. இதில் 165 வீரர்கள் உள்ளனர்.
101.1 மீற்றர் நீளத்தை கொண்ட இந்தக் கப்பல் டிசம்பர் 12ம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும்.
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice
0 Comments