நாட்டினுள் அமைதியையும், அபிவிருத்தியையும் பின்னடையச் செய்யும் மாற்றதையா ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி யெழுப்பியுள்ளார்.
நிலையான நாடாக இலங்கையை கட்டியெழுப்பும் தருணத்தில் நாட்டினுள் இடம்பெறும் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு சில வெளிநாடுகள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு கெம்பல் திடலில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
லிபியா, சிரியா, ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் ஊடாக எந்தவொரு சிறப்பான பிரதிபலனும் கிடைக்கவில்லை.
அராபி வசந்தம் போன்ற ஒன்றை தோற்றுவிப்பதற்கு இலங்கையில் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தமது உரையில் தெரிவித்தார்.


0 Comments