"உலக ஹலால் நாள்"
"World Halal Day" (1-11-14).
அறிவிப்புநாள். இன்று சிங்கப்பூர் "எக்ஸ்போ "வின்
Max atria அரங்கில் நடை பெறுகிறது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் சிறப்புரை நிகழ்த்தி விடை பெற்றார்.
தமது உரையில்,
'இந்த உலகிற்கு முஸ்லிம் சமுதாயம் பல அருட்கொடைகளை அளித்துள்ளது.
கட்டிடக்கலையில், வாழ்வியலில் சுற்றுச்சூழலில் வியாபாரத்துறைல் என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வரும் சமுதாயத்தை பாராட்டுகிறேன்.
இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி, இது அனைவருக்கும் சொந்தமானது.
இன்று "உலக ஹலால் தினம் " என ஐக்கிய நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட சிங்கப்பூர் இந்தியர் Mohamed Jinna வை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
இன்று ஜெனடிக் முறை விவசாயம் மக்களை நலிவுறச்செய்யும் வாழ்க்கை முறைக்கு எடுத்துச்செல்லக்கூடியதாக உள்ளது. இதற்கான மாற்றை யோசிக்க வேண்டும். இந்தியா இன்று வளமான நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கு முதலீடு செய்து தங்களின் ஹலால் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள அழைப்பும் விடுத்தார்.





0 Comments