Arpico சுபர்சென்டர்கள், அல்லது Arpico தினசரி விற்பனை நிலையங்களில் டிசம்பர் மாதத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை வெல்ல முடியும். வெற்றிபெரும் அதிர்ஷ்டசாலிகளுக்கு குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்வதற்கான விஸா, விமான டிக்கட், உணவு, தங்குமிட வசதி, கை செலவுக்காசு என அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என கம்பனி அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட மூன்று வகை உற்பத்திப் பொருள்களை 3000 முதல் 7500 ரூபாவுக்கு
கொள்வனவு செய்யும் குடும்பங்கள் ஒரு வெள்ளைக் கூப்பனைப் பெற்றுக் கொள்வர். தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, இந்தியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், அல்லது துபாய் ஆகிய ஆசிய பிராந்திய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பை வெல்லுவதற்கான அதிர்ஷ்டக் கூப்பனே இதுவாகும். இந்தப் பிரிவில் 17 குடும்பங்களுக்கு மேற்படி அதிர்ஷ்டம் கிட்டவுள்ளது.
குறிப்பிட்ட மூன்று வகை உற்பத்திப் பொருள்களை 7500 முதல் 15000 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் குடும்பங்கள் ஒரு ஆரஞ்சு நிறக் கூப்பனைப் பெற்றுக் கொள்வர். தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா அல்லது ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பை வெல்லுவதற்கான அதிர்ஷ்டக் கூப்பனே இதுவாகும். இந்தப் பிரிவில் நான்கு குடும்பங்களுக்கு மேற்படி அதிர்ஷ்டம் கிட்டவுள்ளது.
ஆகக் கூடுதலாக செலவு செய்பவர்கள் பிரிவில் 15 ஆயிரம் ரூபா அல்லது குறிப்பிட்ட மூன்று வகைகளுக்கு மேற்பட்ட உற்பத்திகளை கொள்வனவு செய்பவர்கள் நீல நிறக் கூப்பன் ஒன்றை பெற்றுக் கொள்வர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் அல்லது பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பை வெல்லும் கூப்பனே இதுவாகும். இந்தப் பிரிவில் நான்கு குடும்பங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன.
அங்கர், கொக்காகோலா, டெல்மிஜ், டோமெக்ஸ் டவ், கெலோக்ஸ், கொஹம்ப பேபி, நோர், மரினா, மன்சி, ரெவெல்லோ, சென்ட் கிளயர்ஸ், சர்ப் எக்ஸல், டொட்லோ மற்றும் பிரிமா ட்ரீட்ஸ் என்பனவே இந்த உற்பத்திகளாகும். முழுக் குடும்பத்துக்கும் சுறுசுறுப்பான பொருள் கொள்வனவு அனுபவத்தை வழங்க எமது சகல நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன” என்று கூறினார் வரையறுக்கப்பட்ட றிச்சர்ட் பீரிஸ் விநியோக நிலையத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் மினோத் டி சில்வா. “இவ்வாண்டு நத்தார் பண்டிகை காலத்தில் எமது
நிலையங்கள் ஊடாக ‘வின் த வேர்ல்ட்’ திட்டத்தின் மூலம் முழுக் குடும்பத்துக்கும் உலகை வெல்லும் உன்னதமானதோர் வாய்ப்பை நாம் வழங்கியுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.
ARPICO சங்கிலித் தொடர் வர்த்தக நிலையமானது தற்போது 16 சுபர் சென்டர்கள், 27 காட்சியறைகள், மற்றும் 12 தினசரி மினி சுபர் மார்க்கெட்கள் என்பனவற்றுடன் செயற்படுகின்றது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments