தமிழ் இந்துக்களுடன் நாம் நல்லுறவைப் பேணி வருகின்றோம். அவர்களுக்கும் எமக்குமிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் வந்ததே கிடையாது. ஆனால் எமது அமைப்பைச் சிலர் திட்டமிட்டு முஸ்லிம் மக்களுடன் பிரித்து வைத்துள்ளனர். அது தவறு என்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாம் தீவிரவாத அமைப்பை நடத்தவில்லை. பெளத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதே எமது நோக்கம். அதற்குத் தடையாக வருவோரை மட்டுமே நாம் எதிர்க்கிறோமே தவிரவும் ஏனைய மதங்களையோ அல்லது எந்தவொரு இனத்தையோ அடக்கியாள்வது எமது நோக்கமல்ல. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை நாம் மதிக்கிறோம் எனவும் அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரியை தோற்கடிக்க தமது அமைப்பு முழு பலத்தையும் பயன்படுத்தும். நாடு முழுவதும் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு பிரசாரத்தில் நாம் ஈடுபடுவோம். ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவை வழங்கி நாட்டை சூழ்ச்சியில் இருந்து பாதுகாப்பதே தமது நோக்கம் என்றார்.
2009 ஆம் ஆண்டு அடக்கப்பட்ட பயங்கரவாதம், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் தலைதூக்கும் சாத்தியம் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பு கருதுகிறது. விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது, அவ்வியக்கம் அழிக்கப் பட்டுள்ள போதிலும், சர்வதேச ரீதியில் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் செயற்பட்டு வருவதாத் தெரிவித்த ஞானசாரதேரர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் வெற்றிபெற்றால், புலிகள் மீண்டும் உயிர்பெறும் சாத்தியம் இருப்பதாகவும் கூறினார்.
முதலில் நாடு, இரண்டாவது இனம், மூன்றாவது மதம் இவற்றை கவனத்தில் கொண்டு மற்றும் இனத்தின் பாதுகாப்பு குறித்து எண்ணியே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதான தீர்மானத்தை பொது பல சேனா எடுத்தது. எமது அமைப்பின் கருத்து அரசியல் அல்ல. எனினும் சகலருக்கும் செவி கொடுக்கப்படும். எதிர்க்கட்சிகளின் அணியில் இருப்பவர்கள் பொய்யர்கள் எனவும் அவர் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் திரும்பிப் பார்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றோம். பொது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பற்றிய பெரிய சாட்சியங்கள் உள்ளன. எதிர்வரும் காலத்தில் அவை வெளியிடப்படும். மைத்திரிபாலவின் இருபுறங்களிலும் முதல் சீடர்கள் இருவர் இருக்கின்றனர். தேசிய பாதுகாப்பைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் வேட்பாளருக்கு எமது ஆதரவு வழங்கப்படும். வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாத மற்றும் லிபரல் வாதத்தினால் தலைவீங்கிப் போன அணிக்கு ஆதரவு வழங்கப்படாது எனவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்தார்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments