40 வயது தாண்டிய ஒருவர் சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நேற்றைய தினம்
சாதித்ததன் மூலம் நிரூபித்து காட்டினார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல
பாகிஸ்தான் டெஸ்ட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக்.
அவுஸ்ரேலிய
அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிகெட் போட்டியின் போதே
இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார். இவரது துடுப்பாட்டத்தின் உதவியுடன்
பாகிஸ்தானின் வெற்றி மேலும் உறுதியாகியுள்ளது.
டெஸ்ட் கிரிகெட்
வரலாற்றில் வேகமான அரைச்சதம் மற்றும் சதம் ஆகிய இரண்டையும் இவர்
தன்வசப்படுத்தினார். அத்துடன் 23 நிமிடங்களில் அரைச்சதத்தை கடந்ததுடன் 74
நிமிடங்களில் சதத்தையும் கடந்தார்.
இதேவேளை அவுஸ்ரேலிய அணிக்கு வெற்றி பெற இன்னமும் 460 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.
/ASM
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments