மினுவாங்கொடையில் இன்று திங்கட்கிழமை (03) காலை இடம்பெற்ற
விபத்துச்சம்பவமொன்றின் போது, இருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ள
நிலையில், மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
மினுவாங்கொடை பிரதான வீதியில் பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடம் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்தோரில் ஒருவரின் கவலைக்கிடமாக இருப்பதனால், அவர் தேசிய
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகளை பெற்றுவருவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வறக்காபொலையில் இன்று திங்கட்கிழமை (03) இடம்பெற்ற மற்றுமொரு
விபத்தில் சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு- கண்டி பிரதான வீதியில் பயணித்த மூன்று பஸ்களும் கார் ஒன்றும்,
ஒன்றுடன் ஒன்று மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என்று
தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் படுகாயமடைந்தோர் தற்போது வத்துபிட்டிவல மற்றும் வறக்காபொலை
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
/ASM
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

.jpg)
.jpg)
0 Comments