ஏ.எச்.எம். பூமுதீன்
மன்னாரில் இடம்பெற்ற் ஏ.ஆர்.ஏ ரஹீம் என்னும் மாணவர் ஒருவரின் கவிதை நூல்
வெளியீட்டின்போது — மாணவனுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து பார்வையாளர்களை
கண் கலங்க வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.
கவிதை நூல் ஒன்றை தயார் செய்த மன்னார் ஏ.ஆர்.ஏ ரஹீம் மாணவன் ஒருவர்,
அமைச்சர் ரிஷாதை ஒரு வருடங்களுக்கு முன்னர் சந்தித்து – நூல்
வெளியீட்டுக்கு பிரதம அதிதியாக அழைத்துள்ளார். அப்போது, தனக்கு வீடு
இல்லாதது பற்றியும் அமைச்சரிடம் எடுத்து கூறியுள்ளார் அந்த மாணவர்.
ஒரு வருடம் உருண்டோடியது .
மாணவன், மீண்டும் வேறு ஒருவர் ஊடாக அமைச்சரை தொடர்பு கொண்டதுடன் மட்டுமன்றி
— அமைச்சர் ரிஷாதை ஒருமுறை கண்டு , ‘ எனது நூல் வெளியீட்டுக்கு இன்னும்
நீங்கள் நேரம் ஒதுக்கி தரவில்லை அதற்கிடையில் நூல்களை கறையான் தின்று
விடும்போல் உள்ளது என்று கூறியுள்ளார்.
அப்போதுதான் அமைச்சர் அவர்களுக்கு அந்த மாணவன் நூல் வெளியீட்டுக்கு
நேரம் ஒதுக்கி கேட்டது நினைவுக்கு வந்ததுடன், அந்த மாணவனுக்கு வீடு
இல்லாததும் நினைவுக்கு வந்தது. ஆனால், வீடு கேட்டதை மாணவன் மறந்துவிட்டான்.
19.10.2014 அன்று மாலை மாணவனின் நூல் வெளியீட்டுக்கு வந்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள்.
முதல் பிரதியையும் பெற்று … மன்னார் தாராபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு
பூர்த்தியாகியுள்ள வீடு ஒன்றையும் அன்பளிப்பாக உடன் வழங்கியும் வைத்தார்.
அப்போதுதான் மாணவனுக்கு அமைச்சரிடம் வீடுகேட்டதும் நினைவுக்கு வந்தது.
இதனை சற்றும் எதிர்பாராத மாணவனுக்கும் சபையோருக்கும் ஆனந்தத்தில்
கண்ணீர் கொட்டியது. சபையில் அமர்ந்திருத்த மாணவனின் தாயின் கண்களை பார்க்க
முடியவில்லை.. நீர் நிறைந்திருந்தது.
வழமையாக நூல் வெளியிட்டு விழாக்களில் முதல் பிரதியை
பெற்றுக்கொள்பவர்கள்முதல் பிரதியை பெற்று சிறு தொகை ஒன்றை வழங்குவது
வழமையாக இருந்துள்ளது.
எனினும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இம்மாணவனின் முதல் பிரதியைப் பெற்று
சிறு தொகையுடன் இலங்கை இலக்கிய விழா வரலாற்றில் வீடு ஒன்றையும் அன்பளிப்பாக
வழங்கி சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார்.
0 Comments