ஜெயலலிதா உட்பட நால்வருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது என செய்திகள் வெளியான சில நிமிடங்களில் ஜாமின் மனு நிராகரிப்பு என இந்திய மற்றும் தமிழக செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெயலலிதாவின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது எனவும் ஊழல் மனித உரிமைக்கு எதிரானது எனக் கூறி ஜாமின் மனுவை நிராகரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.
முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவியதாகவும், அச்செய்திகள் ஜெயலலிதா உட்பட நால்வருக்கு ஜாமின் கொடுக்கப்பட்டது என ஊடகங்களில் , சமூக வலைகளில் வெளியாகியது பரபரப்பு ஏற்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சசிகலா, சுதாகரன், இளவரசிக்கும் ஜாமீன் இல்லை , அவசரமாக ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளது.
0 Comments