(ஜே.ஜி.ஸ்டீபன், ப. பன்னீர் செல்வம்)
தொழிற்சங்கங்களை தூண்டி விட்டு அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளும் எதிர்க்கட்சிகளின் அனைத்து முயற்சிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தகர்க்கப்பட்டு விட்டதாக அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபாலடி சில்வா இன்று சபையில் தெரிவித்தார்.
மக்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவது இலஞ்சமா? என்றும் அமைச்சர் சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. நாடு ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அரசியல் ஸ்த்திரமுள்ள ஆட்சி அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதாரத்தில் சீனாவுக்கு இரண்டாம் இடத்தில் இருக்கின்றோம். இதனால்தான் அரசால் மக்களுக்கு சலுகைகள் வழங்க முடிகின்றது.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் .
https://www.facebook.com/kalpitiyavoice


0 Comments